இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 கோடி பெறுமதியான கடலட்டைகள் மற்றும் சுறா மீன்துடுப்பு மீட்பு (video)
இலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடலட்டைகள், சுறா மீன் துடுப்பு என்பன பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸாரின் நடவடிக்கை
இராமநாதபுரம் - திருப்புல்லாணி அருகே புளித்தோப்பு கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு இன்று(24) கடத்துவதற்காக ஒரு நாட்டு படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கடலட்டை, சுறா மீன் துடுப்புகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகொன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கடத்தல் நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கியூ பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





