50 பயனாளர்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கி வைப்பு
உலக உணவுத் திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வும், விழிப்புணர்வு நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (01) கிண்ணியா மிருக வைத்திய அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள்
கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட சுரங்கல், மணியரசன்குளம், நடுவூற்று மற்றும் மஜித் நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து, இதற்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டடிருந்தனர்.
இதன்போது, பயனாளர் ஒருவருக்கு 16,000 ரூபாய் பெறுமதியான, நாட்டு கோழிக்குஞ்சுகள், 50 பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதனை, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி வழங்கி வைத்ததோடு, விழிப்புணர்வு உரையினையும் நிகழ்த்தினார். கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, கிண்ணியா மிருக வைத்திய அலுவலகமும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து, வாழ்வாரத்தை மேம்படுத்தும் இந்த, திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.




