யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி பலி
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமியொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது 5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமிக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததுடன், நேற்றுமுன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அன்றைய தினம் இரவு சிறுமிக்குக் காய்ச்சலும், வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையில் வெளியான தகவல்
இதன்போது குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு சிறுவர்கள் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்குக்
காய்ச்சலால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ
ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
