யாழில் உணவகமொன்றின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்.சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதன் பின்னர் குறித்த வன்முறை கும்பல் உரிமையாளர் மீதும் சாணித் தண்ணி ஊற்றி தாக்குதல் மேற்கொண்டதாக தாக்குதலுக்கு இலக்காகிய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் பால் ஊட்டும் தாயார் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது.
மேலும் ஏனைய ஐவரையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.





மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
