ஓமந்தைப் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து 5 பேர் கைது
ஓமந்தை (Omanthai), விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (30.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட கண்காணிப்பு
வவுனியா, ஓமந்தைப் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிகையில் பொலிஸார் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றில முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

போப்பின் இறுதிச் சடங்கு... இரண்டு மைல் ஊர்வலம்: விருந்தினர் பட்டியலில் உலகத் தலைவர்கள் News Lankasri
