பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த 5 புதிய உறுப்பு நாடுகள்
பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 உறுப்பு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன.
ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் குறித்த 5 நாடுகளும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
சா்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘பிரிக்’ கூட்டமைப்பை கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின.
உலகப் பொருளாதாரம்
இதைத் தொடா்ந்து, 2010 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ‘பிரிக்ஸ்’ என மறுபெயரிடப்பட்டது. உலகப் பொருளாதார வளா்ச்சியின் முக்கிய இயந்திரமாக இருந்துவரும் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளுடன் 25 சதவீத உலகப் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் , பிரிக்ஸ் விரிவாக்கத்தில் இணைந்த நாடுகளை இந்தியா வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய உறுப்பினர்களின் வருகையால், புவியியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்பட்ட உறுப்பினர் ஆதரவை கொண்ட பிரிக்ஸ், உலக அரசியல் மற்றும் பொருளாதார கூட்டாண்மை உறவுகளை மறுசீரமைக்கும் திறன் பெறுகிறது என இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |