கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 16பேர் கைது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி கடற்தொழிலில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி கடற்தொழிலில் ஈடுபடல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.
சிறு தொழிலாளர்கள்
கட்டைக்காட்டில் இருந்து நேற்று ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை இன்று(12) காலை 8 படகுகளுடன் குறித்த 16பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரை கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இவர்களை காங்கேசன்துறையில் இருந்து வரும் படகுகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்திலையே பல உண்மைகள் வெளிவந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan