காசாவுக்கான போர்நிறுத்தத்தை தவறாக வழிநடத்தும் அமெரிக்கா!
காசாவுக்கான சமீபத்திய போர்நிறுத்தத் திட்டத்தைப் பற்றி அமெரிக்கா வெளிப்படுத்திவரும் கருத்தானது தவறாக வழிநடத்தல் முறைக்கு அமைவாக மேற்கொள்வதாக தோஹா பட்டதாரி ஆய்வுக் கழகத்தின் ஊடக ஆய்வுகள் பேராசிரியரான முகமட் எல்மஸ்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் போர் நிறுத்தம் என்ற போர்வையில் பெரிய குழப்ப நிலையை அமேரிக்கா உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
''போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. எனினும் அமெரிக்கா அதில் முனைப்பு காட்டி வருகிறது.
உண்மைத்தன்மை
அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன்(Antony Blinken) எத்தனை முறை போர்நிறுத்தம் பற்றி வெளிப்படுத்தினாலும், அதன் உண்மைத்தன்மை இதுவரை வெளிவரவில்லை.

இந்தப் போரைத் தொடரப் போவதாக இஸ்ரேல் பலமுறை கூறியுள்ளது.
இது அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கு நேர் முரணானது.
எனினும் ஹமாஸ் விரோதப் போக்கை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan