ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Rakesh Jun 12, 2024 01:18 PM GMT
Report

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி! பொய்யான செய்தி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி! பொய்யான செய்தி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

மீண்டும் தவறிழைக்க வேண்டாம்..

பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இன்று அரசியல் மேடைகளில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கும் குழுவினரிடம் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமும் இல்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தல்களின் போது நபர்களை பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

Sri Lanka Presidential Election 2024

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதற்கு மாறாக நாட்டின் முன்னேற்றுத்துக்கான வேறு திட்டங்களை வைத்துள்ளவர்கள் அதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இன்று துறைசார் மேற்பார்வை குழு அங்கத்தவர்களாகவே இங்கு வந்துள்ளீர்கள். அவ்வாறு செய்வதற்கான ஆலோசனையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவே வழங்கியிருந்தார். இதனால் இளைஞர், யுவதிகள் நாட்டின் முன்னேற்றுத்துக்கான தங்களது யோசனைகளை வழங்க முடியும். அந்த யோசனைகளை நாமும் செவிமடுப்போம்.

Sri Lanka Presidential Election 2024

நாட்டின் பொருளாதார ரீதியான வங்குரோத்து நிலையை பற்றி பலரும் பேசுகிறார்கள். அதனை நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை. இந்த நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்தடைந்துள்ளது என்பதே உண்மையாகும். இவை இரண்டும் பிரித்துப் பார்க்க முடியாத பிரச்சினைகளாகும். நாட்டில் சரியான பொருளாதார முறைமை இன்மையே அதற்கு காரணமாகும்.

நாட்டில் இதுவரையிலும் இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரமே காணப்பட்டது. தேவையான அனைத்துக் பொருட்களையும் இறக்குமதி செய்தோம். அதற்கு செலுத்தத் தேவையான பணமும் எம்மிடம் இருக்கவில்லை. அதற்கு மத்தியில் யுத்தத்துக்கும் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் துரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிப்பதற்கான வாய்ப்பு நாட்டுக்கு கிடைத்திருந்தது.

Sri Lanka Presidential Election 2024

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆன பின்பும் நாம் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. நாம் பழைய முறைகளையே பின்பற்றினோம். பணம் இல்லாத வேளையில் கடன் பெற்றுக்கொண்டோம். அதனை மீளச் செலுத்த முடியாமல் போனது. இவ்வாறான நேரத்தில் நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை சொல்ல எவரும் முன்வரவில்லை. இருப்பினும் நாட்டில் பொருளாதார மாற்றம் ஒன்று அவசியம் என்பதை நான் வலியுறுத்தினேன். அதற்கான பணிகளை செய்யும் போது நாட்டை விற்கப் போவதாக பிரசாரம் செய்யப்பட்டது. இறுதியில் நாம் வங்குரோத்து நிலையை அடைந்தோம்.

நாட்டின் வருமான தேவையைக் கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் வரி அதிகரிப்புச் செய்ய வேண்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச வரிகளை குறைத்தார். அதனால் நாட்டின் வருமானம் குறைந்தது.

Sri Lanka Presidential Election 2024

அந்த நேரத்தில் கோவிட் தொற்றும் பரவியது. நாட்டுக்கு 3 பில்லியன் டொலர் வௌிநாட்டு கையிருப்பு தேவைப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் ஒருவரும் அது பற்றி பேசவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை பிரகடனத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். வேறு எவரும் அதுபற்றி பேசவில்லை. அதற்கு மாறாக செய்ய முடியாது என்று அறிந்தும் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கினர். அதன் பலனாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரேயொரு நாடாளுமன்ற ஆசனம் மட்டுமே கிடைத்து.

உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஓர் ஆசனத்தை வென்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக பதவியேற்றதில்லை. ஆனால், இலங்கையில் அது நடந்தது. நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையே அதற்கு காரணமாகும்.

Sri Lanka Presidential Election 2024

நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க எவரும் முன்வரவில்லை. அதனால் நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் நாட்டின் இளைஞர் யுவதிகளிடமும் இந்த பொறுப்புக்களை வழங்கி அவர்களுக்கு இது குறித்த தௌிவூட்டல்களை வழங்க நாம் தீர்மானித்தோம். அதன்படியே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது நாட்டின் முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. அதனைப் பொறுப்பேற்று நாட்டை முன்னேற்றிச் செல்வதற்காக இளைஞர்கள் தயாராக வேண்டும். இன்று அரசியல்வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரும் அநுர குமார திசாநாயக்கவும் எந்த இடத்தில் விவாதம் செய்வது என்பது குறித்தே ஒரு மாத காலமாக விவாதித்தனர். இறுதியாக ஒரு விவாதத்திற்கு வரவும் இல்லை. இவர்களில் ஒருவரிடத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் இல்லை.

Sri Lanka Presidential Election 2024

அதனால் அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு மாறான வேறு முறைமகள் இருக்குமாயின் அதனை அவர்கள் கூற வேண்டும். எவரும் அவ்வாறான திட்டத்தை முன்வைத்திருப்பதாக தெரியவில்லை. உங்கள் எதிர்காலத்தை பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லாத பட்சத்தில் உங்களின் எதிர்கால முன்னேற்றத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் மிக அவசியமானது.

உங்கள் அறிவு மேம்பாட்டிற்காக ஏனைய அதிகாரிகள் மற்றும் தனியார்துறை பிரதிநிதிகளை சந்திக்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். புதிய திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். பழைய முறைமைகளில் சிக்கிக் கிடப்பதை விடுத்து துரித அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

மஹியங்கனையில் கோர விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மஹியங்கனையில் கோர விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

தொடர்ந்து உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி

தொடர்ந்து உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US