வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மேல் மாகாணம் தவிர்ந்த, ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய முடியுமென சப்ரகமுவ மாகாண செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை இந்த வசதியை கடந்த 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வாகன வருமான அனுமதிப்பத்திரம்
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 29 பிரதேச செயலக அலுவலகங்களும் இவற்றில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருடாந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை சப்ரகமுவ மாகாண வளாகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
