பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 பேர் பலி
பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் போண்டா பஜார் பகுதியில் டேங் அட்டா என்ற இடத்தில் திடீரென்று குண்டுவெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பமானது இன்று(03.11.2023) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு
இதனை தொடர்ந்து, அருகேயுள்ள மருத்துவமனைகளில் அவசரகால நடவடிக்கைகளுக்கு தேவையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்டதை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் பொலிஸ் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணையில், மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
