மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றினால் 5 பேர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 6 பேர் உட்பட 266 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இதுவரை 134 பேர் உயிரிழந்ததுடன், 10,292 பேராக தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 5 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோர் தொகை 134 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை , மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 103 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும் மற்றும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 6 பேர் உட்பட 266 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ந்து 1679 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தொடர்ந்து மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர் அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் முடிந்தளவு வீடுகளில் தங்கியிருந்து சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.




