மன்னாரில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தடை செய்யப்பட்ட இழுவை படகுகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட விடத்தல் தீவு கடற்கரையில் வைத்து குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (29.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும் உப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விடத்தல் தீவு இறங்கு துறையில் இழுவை படகு நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைக்காக 5 கடற்றொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய வலைகளும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







