அவுஸ்திரேலியாவில் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான சிறுவர்கள்
அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் துள்ளி விளையாடும் Jumping Castle- இலிருந்து பள்ளிச்சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 5 சிறுவர்கள் பலியாகியுள்ளதுடன்,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று டஸ்மேனியாவின் Devonport பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பள்ளியின் கடைசி நாளான இன்று மாணவ - மாணவிகளின் விடுமுறையையொட்டி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்விலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திடீரென்று வீசிய கடும் காற்றினால் மேலே பறந்த Jumping Castle-இலிருந்து வெளியே வீசப்பட்ட மாணவர்கள் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த மாணவ - மாணவிகளை வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன்,மேலும் இரண்டு குழந்தைகள் ஹெலிக்கொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
