மட்டக்களப்பில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஐவர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின், கசிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உள்ளிட்ட ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 19 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் 4 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய ஒருவரையும், வாழைச்சேனை சந்தியாறு பகுதியிலிருந்து 25 போத்தல் கசிப்பை எடுத்து வந்த வாகனேரி குளத்துமடு பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
