கிண்ணியா பொலிஸ் பிரிவின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவின் மணலாறு மற்றும் கண்டல் காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் இவர்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டனர் எனக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனத்தையும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பாரப்படுத்த கிண்ணியா பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
