குழப்பத்தை ஏற்படுத்திய காலி மாநகர சபை உறுப்பினர்கள் ஐவர் அதிரடி கைது
காலி மாநகர சபையில் நேற்றையதினம் (30.12.2025) நடைபெற்ற விசேட சபை அமர்வில் குழப்பத்தை ஏற்படுத்திய சபை உறுப்பினர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி மாநகர சபையின் மேயர் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி அவர் மீது தண்ணீரை தெளித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
காலி மாநகர சபை
குழப்பநிலை காரணமாக காலி மாநகர சபையின் மேயர் கூட்டத்தை இடைநிறுத்தி வெளியே சென்றார்.

இதனையடுத்து காலி மாநகர சபை மேயரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரும் இன்று (31) புதன்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த விடுதலைப் புலிகளுடன் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை:பாட்டலியின் பரபரப்பான அறிவிப்பு