மகிந்த விடுதலைப் புலிகளுடன் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை: பாட்டலியின் பரபரப்பான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் தொடுப்பதற்கான உணர்வுப்பூர்வமான எண்ணத்துடன் இருக்கவில்லை.
அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக பிரச்சினையை தீர்க்கவே எண்ணம் கொண்டிருந்தார் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஈழப்போரின் ஆரம்பப் புள்ளி
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் தொடுத்து வெற்றி பெற வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த போட்டியிடவில்லை.எங்கள் அணியின் அழுத்தமும் உத்துதலும் போர் தொடுக்க தள்ளப்பட்டார்.
நாங்கள் அரசாங்கத்திற்கு சென்றதே பிரபாகரனை போர் முனையில் தோற்கடிப்பதற்காகும். அதனால் மஹிந்த ராஜபக்ஷ எங்கள் யோசனைகளை நடைமுறைப்படுத்தினார்.
பங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மூன்றாண்டு திட்டத்தை நான் 1996 ஆம் ஆண்டே தயாரித்தேன்.அதன்படி மூன்று ஆண்டுகளில் யுத்த முனையில் பயங்கரவாதத்தை தோற்கடித்தோம்.

அன்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்லில் போட்டியிடும் போது மங்கள சமரவீர தலைமையிலான தேர்தல் கமிட்டியில் நானும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இருந்தோம்.
அன்று நாட்டுக்கு தலையிடியாக இருந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றிணைந்தோம்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதற்காக இணைந்தார்கள் என்று அவர்கள் தான் குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.