உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் இன்று
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.
எனினும், அவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். முற்றவெளிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயம் இன்று காலை வரையில் எந்தவொரு தமிழ்க் கட்சிகளாலும் துப்புரவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது.
ஆனால், இராணுவப் புலனாய்வாளர்கள் அந்தப் பகுதியில் நேற்றுக் காலையிலிருந்து இன்று காலை வரை காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
நினைவேந்தலுக்கான அழைப்பு
கடந்த காலங்களில் நினைவேந்தலுக்கு முதல் நாள் அந்தப் பகுதி துப்புரவு செய்யப்படுவது வழமை. ஆனால், இம்முறை எவருமே அதனை எட்டியும் பார்க்கவில்லை.
இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறவுள்ள நினைவேந்தலுக்கான அழைப்பை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு நினைவேந்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
