யாழில் நான்காவது நாளாக தொடரும் விமானப்படையின் வான் சாகச கண்காட்சி
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி நிகழ்வுகள் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி நாளை வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பங்கேற்க வாய்ப்பு
இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் கொழும்பில் நடைபெறவுள்ள விமான துறைசார் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில், விபரங்களை தருமாறும் பரிசீலிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதோடு மாணவனுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam