கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் 49ஆவது தேசிய விளையாட்டு விழா
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வெற்றியீட்டிய வீரர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று(22-08-2025) நடைபெற்றுள்ளது.
49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வெற்றியீட்டிய அணியில் பங்கு கொண்ட கிளிநொச்சி இந்துக் கல்லூரியினுடைய பழைய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று பகல் 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது
நிகழ்வின் முன்னதாக முதன்மை விருந்தினர் மற்றும் வெற்றி பெற்ற வீரர்கள் பாடசாலை மாணவர்களின் மான்ட் வாத்திய அணிவகுப்புடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன
இதில் பிரதம அதிதியாக கிளிநொச்சி இந்து கல்லூரியின் முன்னை நாள் அதிபரும் ஓய்வுநிலை அதிபருமாகிய மீனலோகினி இதயசிவதாஸ் கலந்து கொண்டிருந்தார்
49வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகான துடுப்பாட்ட போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்ட அணியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி யின் பழைய மாணவர்கள் ஐந்து பேர் பங்கு பற்றியிருந்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மாகாண விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
