ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் டொலர் உதவி
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு இந்த ஆண்டு வழங்கத் திட்டமிட்டிருந்த நிதியொதுக்கீட்டை 380 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா (Masato Kanda) தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை ஜனாதிபதி எதிர்பார்த்தார்.

அனர்த்தங்களுக்குப் பின்னரான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை தலைவர் பாராட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை எட்ட
சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தது.

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் அவதானித்ததாகக் குறிப்பிட்ட தலைவர், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளைத் தடுப்பதற்கான திட்டங்களுக்கும், குறிப்பாக மத்திய மலைநாட்டின் நீர் விநியோகக் கட்டமைப்புக்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிக்கத் தயாரெனத் தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதோடு பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam