பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் இடமாற்றம்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 22 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் இவர்களுக்கு குறித்த பதவியை வகிக்க தகுதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
இவ்வாறு பதவி நீக்கப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் தன்னார்வ அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதவிகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரகாகொட, மின்னேரிய, சிவாலகுளம், ஓபாத, வஹல்கட, அங்குலான, மஹவ, உடப்பு, அயகம, குச்சவெளி, மடாடுகம, கொஸ்வத்த, ஹசலக, ஹுரிகஸ்வெவ, ஒயாமடுவ, நாகொல்லாகம, நொட்டகரச்சால், மதவச்சி, திவுல்வெவ, பதியதலாவ, நெல்லியடி மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு பதவி இழந்துள்ளனர்.
மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan