யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 46 பேர்! விடுதலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் தற்போது 46 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23.05.2023) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பு
இதேவேளை யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் தற்போது, 14 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சிறைச்சாலைகளில் 45 ஆண்களும் ஒரு பெண்ணும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம்
யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களில் சிலரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தற்போது 22 பேரே சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர்களில் சிலர் நீண்ட காலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
எஞ்சியுள்ள கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கு ஏற்கனவே சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
