டிட்வா புயலின் பெரும் தாக்கம்: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம்
புதிய இணைப்பு
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிப்பு
2000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5400 பேர் வரை உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள். இந்த கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கவில்லை காரணம் முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடற்த 28ம்,29 ஆம் திகதிகளில் மின்னசாரம் தொலைத்தொடர்பு இல்லை (இன்று தான் (30) மின்சாரம் தொலைத்தொடர்புகள் சற்று சீர்செய்யப்பட்டு வருகின்றன) தற்போது தொலைத்தொடர்புவசதிகள் சீர்செய்யப்பட்டாலும் முழுமையாக தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 90ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்இயல்புநிலை மிகமோசமாக பதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
45ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ள்தில் மூழ்கியுள்ளதால் அவை முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது.

வான்பாயும் முக்கிய குளங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கியமான குளங்கள் வான்பாய்கின்றன. முத்தையன்கட்டு,வவுனிக்குளம்,தண்ணிமுறிப்பு குளம்,வான்பாய்கின்றன. மிகமுக்கியமாக மக்களின் போக்குவரத்து பல இடங்களில் தடைப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து பரந்தன் ஊடான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இரண்டு பாலங்கள் சேதமடைந்துள்ளது. நாயாறுபாலம் உடைந்துள்ளதால் இந்த வீதி ஊடாக கொக்குளாய்,வெலிஓயா போன்ற இடங்களுக்கு செல்லமுடியாத நிலை இருக்கின்றது.
இடம்பெயர்ந்து முகாம்களில் வசிப்பவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது பல தரப்பினரின் ஒத்துளைப்புடன் வழங்கப்பட்டு வருகின்றது.
மின்சாரம் நேற்று (29) பிற்பகல் தொடர்கம் மின்சாரம் கிடைத்து வருகின்றது தொலைத்தொடர்பு வசதிகள் இதுவரை முழுமைபெறவில்லை.

கடினமான மீட்பு நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 23 விவசாயிகள் காணாமல்போன நிலையில் நேற்று (29) மாலை திரும்பியுள்ளனர். இருந்தும் நித்தகை குளம் புனரமைப்பிற்காக வேலைசெய்வதற்காக வந்த இருவர் தற்போதும் அந்த பிரதேசத்தில் வெள்ளத்தில் சூழ்ந்து இருக்கின்றார்கள் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் கடினமாக இருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் கமநல சேவைக்குட்பட்ட கோடாலிக்கல்லு குளம் முற்றுமுழுதாக சேதடைந்துள்ளதுடன் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நாயாறு பாலம் தற்காலிகமாக திருத்துவதற்கு நான்குவரையான நாட்கள் எடுக்கும் என வீதிஅபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது இருந்தாலும் நாயாறு பாலம் புதிதாக அமைக்கவேண்டிய தேவை உள்ளது.
வட்டுவாகல் பாலம் ஏற்கனவே புனரமைப்புபணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த பாதையூடான போக்குவரத்து சில நாட்களில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி - கீதன்
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (30) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவரம்
இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 315 குடும்பங்களை சேர்ந்த 930 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 362 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 372 குடும்பங்களை சேர்ந்த 1078 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 582 குடும்பங்களை சேர்ந்த 1826 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 குடும்பங்களை சேர்ந்த 65 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 129 குடும்பங்களை சேர்ந்த 331 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக
குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 42, இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக பயிர்களை சேதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வெள்ளத்தில். மூழ்கிய பயிர் நிலங்கள் மேலும் காட்டு யானைகளால் அழிவடையும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
















பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam