யாழ். பெண்ணொருவரின் டிக்டொக் காணொளியால் 45 இலட்சம் பணத்தை பறிகொடுத்த சுவிஸ் நாட்டவர்

Sri Lankan Tamils Jaffna Switzerland
By Theepan Sep 05, 2024 04:10 PM GMT
Report

இளம் பெண் ஒருவரின் சமூக வலைத்தள காணொளிகளை பார்த்து 45 இலட்சம் ரூபாவை 52 வயதுடைய நபரொருவர் பறிகொடுத்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்ற குறித்த நபருக்கு 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் காணொளிகள் அனுப்பட்டுள்ளன.

வாக்குகளுக்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட இயலாது: தமிழ் எம்.பி திட்டவட்டம்

வாக்குகளுக்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட இயலாது: தமிழ் எம்.பி திட்டவட்டம்

டிக்டொக் கணக்கு

அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.

யாழ். பெண்ணொருவரின் டிக்டொக் காணொளியால் 45 இலட்சம் பணத்தை பறிகொடுத்த சுவிஸ் நாட்டவர் | 45 Lakh Swiss National Who Stole Money

இந்தத் தொடர்பாடலின் பின்னர் அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

டிக்டொக்  கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 இலட்சம் ரூபாவரையில் கொடுத்திருக்கின்றார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன.

விடுதலையான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

விடுதலையான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

பொலிஸ் விசாரணை

ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக காணப்பட்டுள்ளன.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக்டொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பெண்ணொருவரின் டிக்டொக் காணொளியால் 45 இலட்சம் பணத்தை பறிகொடுத்த சுவிஸ் நாட்டவர் | 45 Lakh Swiss National Who Stole Money

விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் டிக்டொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்துள்ளன.

அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் பெற்றிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்கே ஜனாதிபதித்தேர்தல் : தமிழ் பொதுவேட்பாளர்

கடந்தகால இன்னல்களை தீர்ப்பதற்கான இலக்கே ஜனாதிபதித்தேர்தல் : தமிழ் பொதுவேட்பாளர்

நீதிமன்றில் முன்னிலை

அத்துடன், இவர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

யாழ். பெண்ணொருவரின் டிக்டொக் காணொளியால் 45 இலட்சம் பணத்தை பறிகொடுத்த சுவிஸ் நாட்டவர் | 45 Lakh Swiss National Who Stole Money

டிக்டொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை பெற்றுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this,


கோர விபத்தில் தாய், மகள் ஸ்தலத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தை

கோர விபத்தில் தாய், மகள் ஸ்தலத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US