நுகேகொட கலவரம் தொடர்பில் 45 பேர் கைது! - சேத விபரங்கள் வெளியாகின
நுகோகொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
44 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பத்தின் போது ஐந்து பொலிஸார் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பொலிஸ் பேருந்து, பொலிஸ் ஜீப், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டதுடன், ஒரு நீர் பீரங்கி ட்ரக் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுக்கள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



