சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்ற 45 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையின் இரண்டு ரோந்துப் படகுகள் தெற்கு மற்றும் மேற்குக் கடலில் வைத்து வௌ்ளிக்கிழமை இவர்களைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் கடற்பரப்பில் வைத்து 26 நபர்களுடன் ஆழ்கடல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ட்ரோலர் படகொன்றை கடற்படையின் ரோந்துப் படகான கஜபாகு மடக்கிப்பிடித்துள்ளது.
அதே போன்று கடற்படையின் மற்றொரு ரோந்துப் படகான P-481 மேற்குக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோசமான நிலையில் இருந்த ட்ரோலர் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த 19 நபர்களைக் கைது செய்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri