தமிழர் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானை அட்டகாசம் - 43 வயது விவசாயிக்கு நேர்ந்த துயரம்
கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(03.07.2026) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
43 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், ஜெயந்திபுர பகுதியில் அமைந்துள்ள ஜனசவி குளம் அருகே இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த விவசாயி, தனது விவசாயக் காணியை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், மனித - யானை மோதல்களைத் தடுக்க நிரந்தர தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri