இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை
இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 425 பெண்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மேலும் 38 பெண்களும் இந்த ஆண்டில் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அரசு தற்போது பெண் குற்றவாளிகள் மற்றும் ரிமாண்ட் கைதிகளின் நலன், மறுசீரமைப்பு மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.




