ஒரு வருடத்திற்குள் கிளிநொச்சியில் நான்காயிரத்து 224 வழக்குகள் பதிவு
கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது பான உற்பத்தி விற்பனை தடுப்பு தொடர்பாக கடந்த ஒரு வருடத்திற்குள் நான்காயிரத்து 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நான்காயிரத்து 169 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் கடந்த 10ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 4169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைப்பு
அதாவது கடந்த ஒரு வருட காலதிற்துக்குள் 4224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 4,169 சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 49 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 38 பேர் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் பொலிிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெரோயின், ஐஸ், கஞ்சா தொடர்பாக கடந்த 2025 ஆம் ஆண்டில் 515 ஹெரோயின் சுற்றிவளைப்புக்களும் 148 ஐஸ் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களும் 227 கஞ்சா சுற்றிவளைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த பத்தாம் திகதி வரை 321 ஹெரோயின் சுற்றிவளைப்புக்களும் 218 ஐஸ்போதை பொருள் சுற்றிவளைப்புக்களும் 252 கஞ்சா சுற்றிவளைப்புக்களும் இவற்றில் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.