நாட்டில் மேலும் பல பகுதிகள் முடக்கம்!
நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனபடி, மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லேக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பொலிஸ் பிரிவில், கிண்ணியா, பெரியகிண்ணியா, குட்டிக்கராச்சி, அல்தர் நகர், பெரியாத்துமனை, மலிந்தூர், ரஹுமானியான் நகர், சின்னகிண்ணியா, மண்வெளி, கட்டையாறு, குறிஞ்சான்கேணி, முனைச்சேனை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தில், கிரிவுள்ள காவல்துறை அதிகாரி பிரிவின் ஹமன்கல்ல, நாரங்கொட வடக்கு, நாரங்கொட தெற்கு, பட்டபொதெல்ல, மல்கமுவ, தொடங்பொத்த மற்றும் நாரங்கமுவ முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தகுளம் கிராம சேவகர் பிரிவின் சுஹத மாவத்த மற்றும் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவன்திகுடா கிராம சேவகர் பிரிவின் விஜேரத்ன மாவத்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவுவல வடமேற்கு, போவுவல தென்மேற்கு, போவுவல வட மத்திய, போவுவல தென் மத்திய, போவுவல தென் கிழக்கு மற்றும் போவுவல வட கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.