உக்ரைனில் சிதறிக்கிடக்கும் மனித சடலங்கள்: போர்குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் 410 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியமான போர்க்குற்றங்களை விசாரிக்கும் உக்ரைனிய சட்டத்தரணிகளே கீவ்க்கு அருகிலுள்ள நகரங்களில் 410 சடலங்களை கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர்.
தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியதையடுத்து, அடையாளம் காணப்பட்ட 140 உடலங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அரச சட்டத்தரணி இரினா வெனெடிக்டோவா கூறியுள்ளார்.
புச்சாவில் என்ற நகரில் பொதுமக்களின் சடலங்கள் சாலைகளின் குறுக்கே சிதறிக்கிடந்த காட்சிகள், உலகளாவிய கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதேவேளை புச்சா நகரத்தில் பொதுமக்களைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா உறுதியாக மறுத்துள்ளது.