கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 407 குடும்பங்கள் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் 407 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 9 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிவரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில்,
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் பாதியாக்கப்பட்டுள்ளதுடன், 7 தற்காலிக வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் பாதியாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 253 பேர் பாதியாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 190 குடும்பங்களைச் சேர்ந்த 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களிற்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆராய்ந்து அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri