செம்மணி மனித புதைகுழியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அகழ்வு பணி
இந்த அகழ்வு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 முழுமையான எலும்புக்கூடுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.



Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
