மன்னார் கடற்பரப்பில் கைதான தமிழக கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழகம் - இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 8 பேரினுடைய வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிவான், இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 8 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 29ஆம் திகதி இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இயேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மேற்படி 8 கடற்றொழிலாளர்களும் எல்லை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23 படகுகளுடன் 174 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
