விந்தணு வங்கியில் 40 நன்கொடையாளர்கள் பதிவு..!
கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் விந்தணு வங்கியில் ஏற்கனவே கிட்டத்தட்ட 40 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை இயக்குநர் அஜித் குமார தண்டநாராயண தெரிவித்துள்ளார்.
அத்துடன், விந்தணு தானம் தொடர்பாக மருத்துவமனை நாளாந்தம் தொடர்ச்சியான தொலைபேசி விசாரணைகளைப் பெறுவதாகவும், ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விந்தணு தானம்
இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் குழந்தை பெற்று கொள்ள முடியாத நிலையில் உள்ள பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற உதவுவதாகும்.
அதன்படி, விந்தணு தானம் செய்ய முன்வரும் ஆண்கள் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தண்டநாராயண கூறியுள்ளார்.
அதேநேரம், விந்தணு தானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தரப்படும் தொலைபேசி எண்கள் மூலம் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள் 0112 67 89 99 / 0112 67 22 16.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
