40 நாட்களில் 18ஆயிரம் ரஷ்ய படையினரை பலியெடுத்த உக்ரைன் யுத்த பூமி! (Video)
ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து சுமார் 18,500 ரஷ்ய படையினர் போரில் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உக்ரைனின் ஆயுதப் படைகளின் பேஸ்புக் பதிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022. பெப்ரவரி 24 அன்று படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ரஷ்ய இழப்புகளில் 676 டாங்கிகள், 1,858 கவச வாகனங்கள், 150 போர் விமானங்கள் மற்றும் 134 ஹெலிகாப்டர்கள் அடங்கும்.
எனினும் மொத்தம் 1,351 ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,825 பேர் காயமடைந்ததாகவும் கூறிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் 25 க்கு பின்னர் தமது சொந்த புள்ளிவிபரங்களை வெளியிடவில்லை.
இதேவேளை 2022, மார்ச் 21 அன்று, கிரெம்ளின் ஆதரவு செய்தித்தாளான கொம்சோமோல்ஸ்கயா பிராவ்டா, 9,861 ரஷ்ய படைவீரர்கள் இறந்ததாக அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது -
இது ரஷ்ய இறப்புகள் பற்றிய அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தது.
எனினும் இந்த இடுகையை சிறிது நேரத்தில் ரஷ்ய செய்தித்தாள் நீக்கிவிட்டது.