கொழும்பு- புறநகர் பகுதியில் 40 பேருந்துகள் மீது சோதனை
கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய அதிரடி ஆய்வில், 40 நீண்ட தூரத் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.
நேற்று(2.9.2026) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 67 பேருந்துகளின் எஞ்சின் நிலை, புகை வெளியேற்றம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் சோதிக்கப்பட்டன.
சோதனைகள்
இதில் கடுமையான பழுதுகள் கொண்ட 2 பேருந்துகளுக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 38 பேருந்துகளின் குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரிசெய்து, வேரஹேரா அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு முழுவதும் இத்தகைய சோதனைகள் தொடரும் என NTC இன் தலைமை இயக்குநர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam