கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு - மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் குழந்தையை தத்தெடுக்க ஒப்புக்கொண்ட 45 வயதுடைய பெண்ணும், அவரது 19 வயது மகள் மற்றும் 15 வயது மகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
மாளிகாவத்தை லக் செவன அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்த மொஹமட் ரிப்கான் ஹைசா என்ற குழந்தையே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
