ஈரான் மீது சீற்றத்துடன் அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்: இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும், தூதரகங்கள் ஊடாக இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை கடந்து செல்லும் 60 ஆயிரம் கப்பல்கள் : போர் நீடித்தால் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து
ஈரான் உடன் போர் மோதல்கள்
இதற்கிடையில், இஸ்ரேல் - அமெரிக்காவுடன் ஈரானின் போர் மோதல்கள் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கிலுள்ள அண்டை நாடுகள் மீது இனிமேல் தாக்குதல்களை நடத்தப் போவதில்லை எனவும், இதுவரை நடத்திய தாக்குதல்களுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ள போதிலும், ஈரான் இராணுவம் தொடர்ந்தும் குவைத், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஒன்றின் பாகங்கள் விழுந்ததில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்