ஐ சி சி ஒருநாள் அணியில் 4 இலங்கை வீரர்கள்
2024 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் கிரிக்கட் அணியில் நான்கு இலங்கை (Sri Lanka) வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க, பதும் நிசங்க, குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோரே, ஐ. சி.சி அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களாவர்.
சிறந்த பந்துவீச்சு
பதும் நிசங்க, கடந்த ஆண்டு 12 போட்டிகளில் பங்கேற்று, 694 ஓட்டங்களை பெற்றார். அதில் 3 சதங்கள், 2 அரை சதங்கள் அடங்கியிருந்தன.

குசல் மெண்டிஸ்,17 போட்டிகளில் பங்கேற்று, 742 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் 1 சதம், 6 அரை சதங்கள் அடங்கியிருந்தன.
சரித் அசலங்க,16 போட்டிகளில் பங்கேற்று, 605 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில், 1 சதம், 4 அரைசதங்கள் அடங்கியிருந்தன.
வனிந்து ஹசரங்க,10 போட்டிகளில் பங்கேற்று, 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் என்ற சிறந்த பந்துவீச்சு பரிதியை அவர் பெற்றிருந்தார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri