தேசபந்து தென்னகோனை தேடி தீவிரப்படுத்தப்படும் நடவடிக்கைகள்..!
முன்னாள் பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பி செல்லக்கூடிய அபாயநிலை இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, விமான நிலையம் உட்பட அனைத்து தரப்பு அதிகாரிகளும் இதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு எச்சரித்துள்ளது.
விசேட குழுக்கள்...
அத்துடன், தேசபந்து தென்னகோனை தேடி கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேலும் நான்கு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |