வவுனியாவில் அடாவடியில் ஈடுபட்ட இருவர் உட்பட நால்வர் கைது(Photos)
வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் இன்று (04) பிற்பகல் பொலிஸார் முன்னிலையில் அடாவடியில் ஈடுபட்ட இருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தக நடவடிக்கைகள் அதிகமுள்ள வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்திற்குச் சென்ற சிலர் அங்கிருந்தவர்களுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக பண்டாரிகுளம் மற்றும் கோவில்குளம் பகுதிகளிலிருந்து முதலாம் குறுக்குத் தெருவிற்குக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முரண்பாட்டில் ஈடுபட்ட இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பும் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவ இடத்திற்குச் சென்ற குழுக்கள் சிலரிடம் கோடாரி மற்றும் அபாயகரமான ஆயுதங்களும் வைத்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் .
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் இரண்டு மணிநேர விசாரணைகளின் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு அங்கிருந்த இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே வெளியே அவர்களுக்கு ஆதரவாக இரு குழுக்களின் ஆதரவாளர்கள் பலரும் நின்றிருந்தனர். அதில் சில செல்வாக்கானவர்கள் பொலிஸாருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட முற்பட்டபோது பொலிஸார் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தபோது அவர்களுக்கு ஆதரவாக வந்த பலர் தப்பிச் சென்றுவிட்டனர்.
அங்கு குழுமியிருந்தவர்களை விரட்டிய பொலிஸார் நிலைமைகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
