தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய மன்னார் குடும்பம்
இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளடங்களாக நான்கு பேர் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
பிணை
இலங்கையில் தற்போது போர் முடிவுற்று இயல்பு வாழ்வு திரும்புவதான செய்தியில் அடிப்படையில் நேற்று முன் தினம் (14) இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களை கடற்படையினர் அல்லது பொலிஸார் கண்டு கொள்ளாத போதும் தாமாக அவர்கள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
