சிங்கராஜ வனப்பகுதிக்குள் நான்கு சீனப் பிரஜைகள் கைது!
இலங்கையின் சிங்கராஜ வனப்பகுதிக்குள் அரிய பூச்சிகள் மற்றும் ஊர்வன இனங்களைச் சேகரித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட நான்கு சீன நாட்டவர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 40 வகையான பூச்சி மற்றும் விலங்கு இனங்களைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளன.
கிடைத்த தகவலின் அடிப்படையில் பனஹடுவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விளக்கமறியல்
சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் மீட்கப்பட்ட மாதிரிகளும் கலவானை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை 2026 நவம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீட்கப்பட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற மாதிரிகளை அடையாளம் கண்டு, அவற்றின் இயற்கை வாழிடங்களில் விடுவிப்பதற்காக தேசிய அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.