ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு - உயிருடன் மீட்கப்பட்டவரும் மரணம்
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
விரிவான விசாரணை
இந்நிலையில் காணாமல் போனவர்களில் சடலங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை உயிருடன் மீட்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam