யாழில் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது
யாழில் ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றையதினம் (15) நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லிகாராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
மேலும் கஞ்சாவுடன் ஒருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இதனையடுத்து குறித்த நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: கஜிந்தன்





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
