யாழில் திடீரென மயங்கி விழுந்த நபர் மரணம்
யாழ்.சுன்னாகம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீரென மயக்கம்
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14ஆம் திகதி உணவருந்திவிட்டு இருந்தவேளை நெஞ்சுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவசர நோயாளர் காவு வண்டியை அழைத்தவேளை அவ்விடத்திற்கு வந்த அவசர நோயாளர் காவு வண்டியில் இருந்த பணியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர்.
பரிசோதனை
இந்நிலையில் நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
