ஏறாவூரில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய நால்வர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூர் நகரில் தேர்தல் சட்டவிதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை துண்டுபிரசுரங்களுடன் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
நேற்று பகல் 1 மணியளில் இரு வேட்பாளர்கள் சகிதம் அதிகமானவர்கள் ஆதரவு கோரி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
வழக்கு பதிவு
இதனையடுத்து, பொலிஸார் அங்கு சென்ற நிலையில் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் குறித்த கட்சியின் இரு வேட்பாளர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து 175 துண்டுபிரசுரங்களையும் ஒரு விளம்பரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வரும் போது நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவித்து அவர்களை பொலிஸார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam